ஆலய வரலாறு

ஈழமணி திருநாட்டிலே வடபால் அமைந்திருக்கும் யாழ்ப்பாணக்குடா நாட்டிலே நடுநாயகமாக அமைந்திருக்கும் புத்தூர் பதியினிலே மூர்த்தி தலம்,தீர்த்தம் ஆகியனவற்றை தன்னகத்தே கொண்டு வேண்டுவாருக்கு வேண்டுவனவெல்லாம் அள்ளி வழங்கிக் கொண்டிக்கும் ஸ்ரீவிசாலாட்சி அம்பிகா சுவாமி சமேத ஸ்ரீ விசுவநாத சுவாமி தேவஸ்தானம் அமைந்துள்ளது.இது புத்தூர் சிவன் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. 

புத்தூர் சிவன் அமைவிடம்

புத்தூர் சிவன் அமைவிடம்


புத்தூர் சிவன் கோவில் ஆனது இலங்கையின், யாழ்மாவட்டத்தில், புத்தூர் எனும்

கிராமத்தில் (யாழ் ,பருத்தித்துறை சாலையில் , புத்தூர் சந்திக்கு அருகாமையில்)

அமையப்பெற்றது ஆகும் இக்கோவில் தற்போது செழிமைமிகு ஆலயமாக

விளங்கினாலும் இதற்கு என்று ஓர் தனியான வரலாறும் உண்டு.